இலவசமாக 21,000 இருவழி விமான டிக்கெட்டுகளை வழங்கும் கத்தார் ஏர்வேஸ்.!

Qatar Airways thanks teachers with 21,000 complimentary tickets
Pic: Facebook/Qatar Airways

கத்தார் நாட்டின் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இலவச இருவழிப் பயண விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த சவால் மிக்க சூழலில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் வகையில், அத்தகைய 21,000 விமான டிக்கெட்டுகளை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வழங்கவுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் 2022 உலகக் கோப்பை: FIFA தலைவருடன் அமீர் சந்திப்பு..!

கத்தார் ஏர்வேஸ் சேவை வழங்கும் சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை நிபுணர்கள் இதற்குத் தகுதிபெறுவர் என்றும், ஒவ்வொரு நாட்டிற்கும் தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் விமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றைப் பயன்படுத்தி கத்தார் ஏர்வேஸின் தற்போதைய உலகளாவிய 90க்கும் மேற்பட்ட இடங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் செல்லலாம். அத்துடன், மேலும் ஓர் இருவழிப் பயணச் டிக்கெட்டுக்கு 50 விழுக்காடு தள்ளுபடியும் அவர்களுக்கு வழங்கப்படும். அதனை தங்களுக்கோ, குடும்ப உறுப்பினருக்கோ அல்லது நண்பருக்கோ அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த இரண்டையும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்றும், இந்த சலுகைக்கு அக்டோபர் 8 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் COVID-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்; MoPH

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…