கத்தார் ஹமாத் விமான நிலையத்தில் போதை பொருள்கள் பறிமுதல்; ஒருவர் கைது.!

Qatar Customs seizes narcotics
Pic: Qatar Customs

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் மற்றும் போதை பொருள்களை வைத்திருந்த பயணி ஒருவரை கத்தார் சுங்கம் கைது செய்தது.

தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் மற்றும் போதை பொருள்கள், சாக்ஸ் மற்றும் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக கத்தார் சுங்கம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் ஷூவுக்குள் மறைத்து கடத்த முயன்ற போதை மாத்திரைகள் பறிமுதல்.!

0.8 கிராம் cocaine , 24.7 கிராம் marijuana மற்றும்  84 Lyrica மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: COVID-19: கத்தாரில் இன்று ‌மேலும் இருவர் பலி; புதிதாக 200 பேர் பாதிப்பு.!

முன்னதாக, கத்தாரில் தனிப்பட்ட பார்சல்கள் ஒன்றில், ஷூவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 போதை மாத்திரைகளை (narcotic pills) அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…