குவைத் அமீர் மறைவு: கத்தாரில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.!

Qatar flag half-mast atop Amiri Diwan
Photo: Qatar Day

குவைத் நாட்டின் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (29-09-2020) காலமானார்.

குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்களுக்கு தற்போது வயது 91. குவைத் அமீர் உயிரிழந்ததை தொடர்ந்து கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் மிகுந்த சோகத்துடன் தன்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குவைத் அமீரின் மறைவுக்கு கத்தாரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் – கத்தார் அமீர் அறிவிப்பு.!

குவைத் அமீரின் மறைவுக்கு கத்தார் நாட்டில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் கத்தார் அமீர் தெரிவித்தார்.

Pic: Gulf Times
Pic: Qatar Day

இந்நிலையில், மறைந்த குவைத் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தோஹாவில் உள்ள அமிரி திவான் அலுவலகம் மற்றும் பிற இடங்களில் கத்தார் நாட்டு கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

இதையும் படிங்க: கத்தார், இந்தியா இடையே அக்டோபர் மாதம் இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்.!

குவைத் அமீரின் மறைவுக்கு கத்தார் அமீர் உருக்கம்..!#QatarTamilNews | #Qatar | #KuwaitAmir | #Kuwait | #கத்தார்செய்திகள்

Posted by Tamil Micset Qatar on Tuesday, 29 September 2020

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…