கத்தார் பெட்ரோலியம் டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

Qatar Fuel Prices January
Poc: WOQOD

கத்தார் பெட்ரோலியம் டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளை இன்று (30-11-2020) அறிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த அந்த விலையில், எந்த மாற்றமுமின்றி டிசம்பர் மாதத்தில் விற்கப்பட உள்ளது.

புதிய விலைப்பட்டியலின் படி, டிசம்பர் 01 முதல் பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு QR 1.20 ரியால்களாக விற்பனையாகும். மேலும், சூப்பர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு QR 1.25 ரியால்களுக்கு விற்பனையாகும்‌.

கத்தாரில் முகக்கவசம் அணிய தவறியதற்காக இதுவரை 2,000 பேருக்கு மேல் நடவடிக்கை.!

ஒரு லிட்டர் டீசல் QR 1.15 ரியால்களுக்கு விற்பனையாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 5 திர்ஹம்கள் அதிகமாகும்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…