கத்தாரில் களைகட்டும் 5வது அறுவடை திருவிழா.!

Qatar mahaseel festival ongoing
Pic: Jayan Orma/Gulf-Times

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MME) ஒத்துழைப்புடன் வருடாந்திர Mahaseel (அறுவடை) விழாவின் ஐந்தாம் பதிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த அறுவடை விழாவை ஜனவரி 2ம் தேதி வரை நடத்த கலாச்சார கிராம அறக்கட்டளை (Katara) ஏற்பாடு செய்துள்ளது.

கத்தாரின் அல் வக்ரா சந்தையில் குறைந்த விலையில் மீன்கள்.!

கத்தார் குடியிருப்பாளர்களிடையே அறுவடை விழா பெரும் வரவேர்ப்பை பெற்றுள்ளது.

இந்த அறுவடை விழா உள்ளூர் பண்ணைகள் தங்களுடைய விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதற்கும், உள்ளூரில் வளர்க்கப்படும் பலவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் சிறந்த தளத்தை வழங்குகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முதன் முறையாக இன்று கத்தார் வருகை.!

இந்நிகழ்ச்சியில், 28 கத்தார் பண்ணைகள் மற்றும் ஒன்பது தேசிய நிறுவனங்களின் புதிய விவசாய பயிர்கள் மற்றும் தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

இந்த விழாவானது, ஜனவரி 2ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கட்டாராவின் தெற்குப் பகுதியில் நடைபெறும் என்றும், அதன்பிறகு வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை Mahaseel Souq-ல் தொடர்ந்து நடைபெறும் என கட்டாரா அறிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…