கத்தார் 2020 தேசிய தினத்தின் முழக்க வாசகத்தின் தமிழாக்கம்.!

Qatar National Day slogan
Pic: @NDQatar

கத்தாரில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி தேசிய தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், 2020 தேசிய தின முழக்க வாசகம் நேற்று (03-12-2020) வெளியிடப்பட்டது.

கத்தார் தேசிய தின கொண்டாட்டங்கள் ஏற்பாட்டுக் குழு நேற்று இரவு (03-12-2020) கத்தார் தேசிய தினம் 2020ஆம் ஆண்டுக்கான முழக்க வாசகத்தை அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டது.

பிலிப்பைன்ஸில் கோரத்தாண்டவமாடிய வாம்கோ புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வாரி வழங்கிய கத்தார்.!

ஒவ்வொரு ஆண்டும் கத்தார் தேசிய தின ஏற்பாட்டுக் குழு கொண்டாட்டங்களுக்கு என தனித்துவமான முழக்கத்தை வெளியிடுகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய தின முழக்கத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியாக்கம்:

தமிழ்:

“சிம்மாசனத்தின் ஆண்டவரே, நாங்கள் உங்களைப் புகழ்கிறோம்,

உங்கள் தீர்ப்பை எல்லா செயல்களிலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.”

ஆங்கிலம்:

“We praise you, the Lord of the Throne,

We accept your judgment in all actions.”

இந்த முழக்கம் கத்தார் மாநில நிறுவனர் ஷேக் ஜாசிம் பின் முகமது பின் தானி அவர்களின் கவிதைகளில் ஒன்றாகும்.

இந்த முழக்கம் நாடு நிறுவப்பட்ட நம்பிக்கை அடித்தளங்கள் மற்றும் மக்களின் வலிமையையும், இந்த நிலத்தையும் விளக்குகின்றது.

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் கடத்த முயற்சி.!

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…