ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த கத்தார் விருப்பம்..!

Pic: Qatar Day

2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இதற்கு முன்னர் விருப்பம் தெரிவித்துள்ளன.

கத்தார், 2016, 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்தும் போட்டியில் பங்கேற்று, இரண்டு முறையும் அதன் விருப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் 2022 FIFA உலகக் கோப்பை போட்டிகள் நவம்பரில் தொடக்கம்; அட்டவணை வெளியீடு.!

உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதில் தனக்கு நல்ல அனுபவமும், நற்பெயரும் உள்ளதாக கத்தார் கூறியுள்ளது.

இருப்பினும், ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் காலக்கட்டத்தில் கத்தாரின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பதால் போட்டிகளை நடத்துவதில் சிக்கல்கள் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி, கத்தார் 2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த அனுமதி பெற்றால், மத்திய கிழக்கு வட்டாரத்தில் நடைபெறும் முதலாவது ஒலிம்பிக் போட்டியாக அது இருக்கும்.