கத்தாரில் 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான புதிய மைதானம் திறப்பு..!

Pic: iloveqatar.net

கொரோனா வைரஸ் தொற்றால் மத்திய கிழக்கு உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கத்தார்  2022 FIFA உலகக் கோப்பைக்குப் பயன்படுத்தப்பட உள்ள மைதானத்தை திறந்து வைத்துள்ளது.

இந்த மைதானம் திறப்பை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னணியில் போராடி வரும் ஊழியர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில், சிறப்பு நிகழ்ச்சியை ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தது. அதில், ஆர்கெஸ்ட்ரா இசைக் கலைஞர்கள் தங்களது கருவிகள் கொண்டு இசையமைக்க, கொரோனா போராளிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: COVID-19 காலத்தில் சேவை ஆற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அமீர் பாராட்டு.!

இதுக்குறித்து, 2022 உலகக் கோப்பையின் CEO நாசர் அல்-காதர் அவர்கள் கூறுகையில், இது நம்பிக்கையை பிரதிபலிக்கும் செய்தி. உலகில் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் போராளிகளுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு. எங்களால் முடிந்த ஒரு சிறிய காரியம் என்று நெகிழ்ச்சிப் பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சுமார் 40,000 பேர் அமர்ந்து கால்பந்து விளையாட்டைப் பார்க்கக் கூடிய இந்த மைதானத்திற்கு “Education City Stadium” எனப் பெயரிடப்பட்டுள்ளது. காரணம் அந்த மைதானத்தைச் சுற்றி பல கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளது. புத்தம் புதிதாக கட்டப்பட்ட இந்த மைதானத்தில்தான், உலகக் கோப்பையின் அரையிறுதி நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை இந்த மைதானத்தில் ஒரு பொதுப் போட்டி கூட நடைபெறவில்லை.

இந்த மைதானம் மட்டுமல்ல, கத்தாரில் உலகக் கோப்பையையொட்டி, பல்வேறு மைதானங்கள் கட்டப்பட்ட வருகின்றன. அந்த மைதானங்களைக் கட்டுவதற்கான ஊழியர்கள் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில், 2022ல் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக ஏற்கனவே கலிபா சர்வதேச மைதானம் மற்றும் அல் ஜனூப் மைதானங்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.