கத்தார் தோஹா மெட்ரோ திட்டம் சர்வதேச விருதை தட்டிச் சென்றது.!

கத்தார் ரயிலின் தோஹா மெட்ரோ திட்டமானது 2020 Chartered Institute of Highways and Transportation (CIHT) விருதை வென்றுள்ளது.

 

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, பால்கன் ஆகிய நாடுகளில் மெகா திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, தோஹா மெட்ரோ திட்டம் இந்த விருதை வென்றுள்ளது என கத்தார் ரயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திற்கு வெளியில் இருந்து நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு அல்லது சேவைகளின் சிறந்த எடுத்துக்காட்டுகளையும் CIHT விருதுகள் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pic: Twitter/Qatar Rail

இந்த CIHT விருதுகள் கடந்த ஆண்டு முதல் சர்வதேச திட்டங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. கத்தாரில் முதல் முறையாக இந்த மதிப்புமிக்க விருதை வென்ற முதல் திட்டம் கத்தார் ரயிலின் தோஹா மெட்ரோ திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் கத்தார் HIA இரண்டாம் இடம்..!

 

Source: The Peninsula Qatar