கொரோனா அப்டேட் (ஜூன் 22): கத்தாரில் புதிதாக 1,034 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

Image Credits: ilq.net

கத்தாரில், கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 99வது மரணம், 1,034 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 1,637 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (22-06-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின்  எண்ணிக்கை 88,403ஆக உயர்ந்துள்ளது.

மேலும், COVID-19 தொற்றுக்குள்ளான புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாகவும் MoPH தெரிவித்துள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மேலும் ஒருவர் பலி.!

கத்தாரில், இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 1,637 நபர்கள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 69,956ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 3,778 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 3,24,570 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.