கத்தாரில் 30 சதவீத திறனுடன் பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகள் தொடக்கம்.!

Buses and metro services to resume at 30% capacity from Sept 1
Bus Pic: qatarquick

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தின் நான்காம் கட்டமாக, 30% திறனுடன் பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக பொது போக்குவரத்து மற்றும் தொடர்பு அமைச்சகம் (Ministry of Transport and Communication) அறிவித்துள்ளது.

மேலும், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் பின்பற்றபட வேண்டிய பல்வேறு வழிகாட்டுதல்களை MOTC தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் COVID-19 கட்டுப்பாடுகளை தளர்த்தும் 4ம் கட்டம் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நல்வாழ்வையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான முந்தைய முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் 4ம் கட்ட தளர்வில், பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்குவதையடுத்து, பின்பற்றப்படும் முன்னெச்சரிக்கை…

Posted by Tamil Micset Qatar on Saturday, August 29, 2020

கத்தார் பொது சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, செப்டம்பர் 1 முதல் பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகள் 30% திறனுடனும், முன்பு செயல்பட்டு வந்த வேலை நேரத்தின்படியும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் நான்காம் கட்டமாக என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்வு.? – முழு விபரம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram