கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் கடத்த முயற்சி.!

smuggle banned pills Qatar
Pic: Qatar Customs

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட லிரிகா (Lyrica) மாத்திரைகளை கடத்தும் முயற்சியை ஏர் கார்கோ மற்றும் தனியார் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்தனர்.

இதுகுறித்து கத்தார் சுங்கம் ட்வீட்டரில், கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1,343 லிரிகா மாத்திரைகள் ஒரு பார்சலுக்குள் மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களின் தொகுப்புகளில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கத்தாரில் வண்ணமயமான மலர் திருவிழா துவக்கம்.!

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்திற்கு விமான சேவைகளை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!