கத்தாரில் தெரு நாய்களுக்கு தங்குமிடம் அளிக்கும் திட்டம் தொடக்கம்.!

stray dogs Ministry shelter
Pic: MME

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) தடயவியல் (forensic) ஒத்துழைப்புடன் தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு இருப்பிடம் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த திட்டம் அமைச்சத்தால் சிறப்பாக நிறுவப்பட்ட விலங்குகளின் இருப்பிடத்தில் தெரு நாய்களை கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

கத்தாரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் தற்காலிகமாக மூடல்.!

இந்த இருப்பிடம் மூலம் நாய்களுக்கு மருத்துவ பராமரிப்பு, ஊட்டச்சத்து, நீர் மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் அடுத்த கட்டத்தில், Rawdat Al Faras பகுதியில் உள்ள நிரந்தர விலங்கு தங்குமிடத்தில் பணிகளை முடித்த பின்னர், “Refq” திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் தெரு நாய்கள் மற்றும் பூனைகளை கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கத்தாருக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்.!

மேலும், இந்த விலங்குகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் அவற்றை மறுவாழ்வு செய்வதற்கும் நோக்கமாக கொண்டு நாடு முழுவதும் தெருக்களிலிருந்து ஏராளமான தெரு நாய்கள் மற்றும் பூனைகளைப் பெற்று தங்குமிடம் தயாராகி வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.