துருக்கி நிலநடுக்கம்: கத்தார் நாட்டிற்கு நன்றி தெரிவித்த துருக்கி தூதர்.!!

Turkish ambassador thanks Qatar
Pic: Twitter/Qatar News

துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து, கத்தார் அரசு மற்றும் மக்கள் காட்டிய ஒற்றுமைக்கு கத்தார் நாட்டிற்கான துருக்கி தூதர் H E Mehmet Mustafa Goksu தனது நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

கத்தார் அதிகாரிகள் மற்றும் மக்களிடமிருந்து தனக்கு பல அழைப்புகள் வந்ததாகவும், துருக்கிக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க அவர்களின் ஒற்றுமையையும், தயார் நிலையையும் வெளிப்படுத்தினார்கள் என தூதர் கூறினார்.

கத்தாரில் உள்ள இந்த சந்திப்பு 5 மாதங்களுக்கு மூடல் – MOI அறிவிப்பு.!

மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு துருக்கி அரசு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருவதாகவும், நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கத்தார் அமீர் அவர்கள் துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடல் பற்றியும் துருக்கி தூதர் பேசினார்.

முன்னதாக, துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகளை தணிக்க கத்தார் அரசு உதவ தயாராக உள்ளது என்றும் துருக்கி அதிபரிடம் அமீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

துருக்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கத்தார் அரசு உதவ தயார்..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…