விஜய் மல்லையா மீது கத்தார் தேசிய வங்கி தொடுத்த வழக்கில் லண்டன் கோர்ட் புதிய உத்தரவு..!

UK court order for sale Vijay Mallya boat.

கிங்பிஷர் விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபருமான விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொல்லை காரணமாக இந்தியாவில் இருந்து தலைமறைவாகி இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

மேலும், இவர் கத்தார் தேசிய வங்கியில் இருந்தும் கோடிக்கணக்கில் பணம் வாங்கி இருப்பதாக வங்கி தரப்பில் லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விஜய் மல்லையாவிற்கு கத்தார் தேசிய வங்கி நோட்டீஸ்..!

விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் நிறுவனமான “போர்ஸ் இந்தியா” கத்தார் தேசிய வங்கியில் சுமார் ரூ.47.23 கோடி கடன் வாங்கியதாகவும் அந்த கடனை திருப்பி அடைக்காத நிலையில், அதற்கு செக்யூரிட்டி உத்தரவாதம் வழங்கிய விஜய் மல்லையா மீதும் வழக்கு தொடர்ந்தது. மனுவில், போர்ஸ் இந்தியா நிறுவனம் வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.40 கோடி பாக்கி தரவேண்டியுள்ளது. இந்த பாக்கி தொகைக்காக விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு படகை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தது.

இந்த வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, லண்டன் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்று அந்த பணத்தை கத்தர் தேசிய வங்கி இடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.