VBM 4ம் கட்டம்: கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு.!

வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டமாக கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 7 கூடுதல் விமானங்களின் பட்டியலை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இன்று (15-07-2020) வெளியிட்டுள்ளது.

கத்தார் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள கூடுதல் விமானங்களின் அட்டவணைப்படி, தோஹாவில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானம், கயாவுக்கு (Gaya) 2 விமானம், விஜயவாடாவிற்கு ஒரு விமானம், விசாகப்பட்டினத்திற்கு ஒரு விமானம், அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூருக்கு ஒரு விமானமும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு செல்லும் இந்த கூடுதல் விமானங்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VBM 4ம் கட்டம்: கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் ‌17 கூடுதல் விமானங்களின் பட்டியல் வெளியீடு.!