தோஹாவிலிருந்து தமிழகத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.!

Air India Express
Picture Credits: businessinsider.com

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு நேற்று (15-08-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.

கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு 172 பயணிகள் மற்றும் 3 கைக்குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1674 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 187வது விமானம் ஆகும்.

இதையும் படிங்க: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கத்தாரில் இரத்ததான முகாம்கள்..!

மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 546 கைக்குழந்தைகள் மற்றும் 32,559 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/