இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கத்தாரில் இரத்ததான முகாம்கள்..!

Blood donation camp in Qatar
Pic: OTP

இந்தியாவில் 74வது சுதந்திர தினம் நேற்று (15-08-2020) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திர தினத்தை நினைவுக்கூறும் வகையில் கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை மற்றும் ஹமாத் இரத்ததான நிலையம் இணைந்து இரத்ததான முகாமை‌‌ நடத்தியது.

இந்த நிகழ்வானது, ஒருங்கிணைந்த தமிழர் பேரவை துணை தலைவர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. மேலும், இதில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சார்பில் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கத்தார் அமீர் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்து..!!

இரத்ததான முகாமில், கத்தார் வாழ் மக்கள் ஏராளமானவர்கள் தன்னார்வத்துடன் இப்பேரிடர் காலத்தில் கத்தாரின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இரத்ததானம் வழங்கினர். இரத்ததான வழங்கிய அனைவருக்கும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் ரெஜினா பேகம் அவர்கள் இரத்ததான சான்றிதழை வழங்கினார்.

இந்த நிகழ்வில், கலந்துகொண்ட அனைவருக்கும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் செயலாளர் ஹாஜிமுகம்மது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Blood donation camp in Qatar
Pic:TMKIP

மேலும், கத்தாரில் தாய்மண் கலை இலக்கியப் பேரவை மற்றும் இசுலாமிய சனநாயக பேரவை சார்பிலும் ஹமாத் மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதையும் படிங்க: கத்தாரில் வாகனங்களில் ஓட்டுநர் உட்பட நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி; MOI ட்வீட்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/