மறைந்த குவைத் அமீர் சகோதரிகளுக்கு கத்தார் அமீரின் மனைவி இரங்கல்..!

Wife of HH the Amir conveys condolences to Sisters of the Late Sheikh Sabah Al-Ahmad
Image Credits: Qatar Day

குவைத் நாட்டின் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (29-09-2020) அன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில், கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் மனைவி HH Sheikha Jawaher bint Hamad bin Suhaim Al-Thani அவர்கள் நேற்று (01-10-2020) மறைந்த குவைத் அமீரின் சகோதரிகள் Sheikha Al-Anoud Al-Ahmad Al-Jaber Al-Sabah மற்றும் Sheikha Amthal Al-Ahmad Al-Jaber Al-Sabah ஆகியோருடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இதையும் படிங்க: மறைந்த குவைத் அமீரின் இறுதி சடங்கில் பங்கேற்றார் கத்தார் அமீர்.!

இந்த உரையாடலில், குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும், மறைந்த குவைத் அமீர் அவர்கள் சொர்க்கத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கவும், ஆளும் குடும்பம் மற்றும் குவைத் மக்கள் பொறுமையுடனும், ஆறுதலுடனும் இருக்க தான் சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: கத்தாரில் அக்டோபர் மாதம் வானிலை இனிமையாக இருக்கும்; வெப்பநிலை படிப்படியாக குறையும் – QMD ட்வீட்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…