கத்தாரில் சர்வதேச அரேபியன் குதிரை திருவிழா இன்றுடன் நிறைவு.!

Arabian Horse Festival concludes
Pic: Katara

கட்டாராவின் எஸ்ப்ளேனேட் (esplanade) பகுதியில் நடைபெற்று வரும் சர்வதேச அரேபியன் குதிரை விழா (KIAHF) இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த விழாவை நீதி அமைச்சரும், அமைச்சரவை விவகாரங்களுக்கான மாநில அமைச்சருமான H E Dr. Issa bin Saad Al Jafali Al Nuaimi, நிதி அமைச்சர் H E Ali Shareef Al Emadi, கலாச்சார கிராம அறக்கட்டளையின் பொது மேலாளர் Dr. Khalid bin Ibrahim Al Sulaiti மற்றும் பல தூதர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

கத்தாரில் சர்வதேச அரேபியன் குதிரை விழா துவக்கம்.!

இந்த விழாவில் அரேபிய குதிரைகளின் நிலையை எடுத்துக்காட்டும் விதமாக பல தனித்துவமான கலை கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

மேலும், அல் அசீல் கண்காட்சி, குதிரை ஓவியங்களின் கண்காட்சி, 3D விளையாட்டுகள் மற்றும்
குதிரை சாடில்ஸ் (saddles) வரைதல் போன்றவை இடம்பெற்றுள்ளது.

கத்தார் தேசிய விளையாட்டு தினத்தில் பொது மக்களுக்கு அனுமதியில்லை.!