கத்தாரில் 5வது அறுவடை திருவிழா நாளை மறுநாள் தொடக்கம்.!

Local agricultural produce festival
Pic: The Peninsula

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் வருடாந்திர Mahaseel (அறுவடை) விழாவின் ஐந்தாம் பதிப்பு வருகின்ற புதன்கிழமை தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை நடத்த கலாச்சார கிராம அறக்கட்டளை (Katara) ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆண்டு அறுவடை விழாவில், கத்தார் பண்ணைகள், உணவு உற்பத்தி, கால்நடைகள் மற்றும் கோழிப்பண்ணையில் நிபுணத்துவம் பெற்ற தேசிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

குவைத் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஷேக் நாசர் காலமானார் – கத்தார் அமீர் உள்ளிட்டோர் இரங்கல்.!

இந்த விழாவானது, கத்தார் பண்ணைகளின் அனைத்து உரிமையாளர்கள் மற்றும் விவசாயத் துறையின் முதலீட்டாளர்கள் காய்கறிகள், விவசாய பயிர்கள், உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகளின் தனித்துவமான மற்றும் மாறுபட்ட உள்ளூர் தயாரிப்புகளைக் சந்தைப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் வாய்ப்புகள் வழங்க உள்ளது.

இந்த விழாவில், சுமார் 28 கத்தார் பண்ணைகள், இறைச்சி, முட்டை, கோழி, பால் மற்றும் அதன் வழித்தோன்றல்களின் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற 9 தேசிய நிறுவனங்கள் மற்றும் மலர், ரோஜாக்கள், அலங்காரம் போன்ற தாவர துறையின் 8 நர்சரிகள் உள்ளிட்ட 45 ஸ்டால்கள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் திருமண நிகழ்ச்சியில் அதிக நபர்கள் பங்கேற்க அனுமதி.!

இந்த அறுவடை விழா வேளாண் மற்றும் கால்நடைத் துறையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது என்றும், உணவு பாதுகாப்பு முறைக்கு சேவை செய்யும் முக்கியமான உற்பத்தித் திட்டங்களைத் திறக்க தூண்டுகிறது என்றும் கட்டாராவின் பொது மேலாளர் டாக்டர் காலித் பின் இப்ராஹிம் அல் சுலைதி தெரிவித்துள்ளார்.

இந்த அறுவடை விழா டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கட்டாராவின் தெற்குப் பகுதியில் நடைபெறும் என்றும், அதன்பிறகு வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை Mahaseel Souq-ல் தொடர்ந்து நடைபெறும் என கட்டாரா அறிவித்துள்ளது.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…