கத்தாரில் அடுத்த கல்வியாண்டில் இரண்டு புதிய இந்திய பள்ளிகள்.!

New Indian Schools
Pic: Indian Embassy of Qatar

கத்தாரில் இரண்டு புதிய இந்திய பள்ளிகள் வர உள்ளது என கத்தார் இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த புதிய பள்ளிகள் கத்தாரில் உள்ள இந்திய குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 3,000 இடங்களை வழங்கும் என்று கத்தார் இந்திய தூதர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29-11-2020) அன்று  ஊடகங்களில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

நைஜீரியா: 110 அப்பாவி மக்கள் கொடூர கொலை – கத்தார் கடும் கண்டனம்.!

மேலும், தேவையான ஒப்புதல்களைப் பெறுவதற்கான செயல்முறை நடந்து வருகிறது என்றும், கத்தார் கல்வி அதிகாரிகளின் ஆதரவு உள்ளது என்றும் அவர் கூறினார்.

Al Wukair பகுதியில் உள்ள நோபல் இந்தியன் பள்ளி ஒரு புதிய வளாகத்தை அமைக்கும் என்றும், Bani hajer பகுதியில் உள்ள சர்வதேச பிரிட்டிஷ் பள்ளியில் CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதை இந்திய பள்ளியாக மாற்றப்படும் என்றும் தூதர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கத்தாரில் இந்திய கல்வி நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றும் கத்தார் இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் கூறியுள்ளார்.

உள்நாட்டு விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் கத்தார்; அல் மீராவிலும் விற்பனை தொடக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…