சவுதியில் கெரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பட்டத்து இளவரசர்.!

Saudi Crown Prince
Pic: @spagov

சவுதி அரேபியா பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) அவர்கள் முதல் டோஸ் COVID-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

சவுதி அரேபியா சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ள தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தின் கீழ், முதல் டோஸ் தடுப்பூசி இளவரசர் முகமது பின் சல்மானுக்குச் செலுத்தப்பட்டது.

கத்தாரில் விரைவாக நடைபெறும் COVID-19 தடுப்பூசி போடும் பணி.!

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரசு ஊடகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு இந்த மாதத்தில் பைசர் கொரோனா தடுப்பு மருந்து வந்தடைந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு சவுதி அரேபியா ஒருவார காலம் தடை விதித்து குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முதன் முறையாக இன்று கத்தார் வருகை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…