கத்தாரில் இன்று (ஆகஸ்ட் 23) புதிதாக 243 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

243 Covid-19 cases and 277 recoveries in Qatar on Aug 23
Photo: KARIM JAAFAR / AFP

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 243 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 277 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (23-08-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 117,008ஆக உள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் பல்வேறு இடங்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு களக்குழுக்கள்..!

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 277 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,13,808ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 5,797 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 5,89,920 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் Umm Slal பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றம்..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram