கத்தாரில் ஷூவுக்குள் மறைத்து கடத்த முயன்ற போதை மாத்திரைகள் பறிமுதல்.!

Air Cargo inspectors seize narcotic pills hidden inside shoe
Pic: Qatar Customs

கத்தார் நாட்டில் போதை மாத்திரைகள் கடத்தும் முயற்சியை Air Cargo மற்றும் தனியார் விமான நிலைய சுங்க அதிகாரிகள் முறியடித்தனர்.

இதுகுறித்து கத்தார் சுங்கம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தனிப்பட்ட பார்சல்கள் ஒன்றில், ஷூவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 போதை மாத்திரைகளை (narcotic pills) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் COVID-19 PCR பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் புதுப்பிப்பு பட்டியல்.!

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கத்தாரில் முடி பராமரிப்பு பொருட்களில் மறைத்து வைத்து கடத்த முயன்ற 1500 கிலோ புகையிலை பொருட்களை Air Cargo மற்றும் தனியார் விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…