கத்தார் தேசிய தினம்: FIFA தலைவருடன் ‌கத்தார் அமீர் சந்திப்பு.!

Amir Meets FIFA President
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் FIFA அமைப்பின் தலைவர் HE கியானி இன்ஃபாண்டினோ (Gianni Infantino) அவர்களை நேற்று (18-12-2020) சந்தித்தார்.

கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு, Al Sadd மற்றும் Al Arabi அணிகளுக்கு இடையிலான அமீர் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக கத்தார் நாட்டிற்கு FIFA அமைப்பின் தலைவர் வந்த சமயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கத்தாரில் திருமண நிகழ்ச்சியில் அதிக நபர்கள் பங்கேற்க அனுமதி.!

இந்த சந்திப்பில், 2022ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை கத்தாரில் நடத்துவதன் முன்னேற்றங்கள் குறித்தும், கத்தார் நாட்டிற்கும், FIFA-க்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்திப்பில் அமீரின் தனிப்பட்ட பிரதிநிதி HH ஷேக் ஜாசிம் பின் ஹமாத் அல் தானி அவர்களும் கலந்து கொண்டார்.

கத்தார் தேசிய தின அணிவகுப்பு: கத்தார் அமீரின் தந்தை உட்பட பலர் பங்கேற்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…