கத்தாரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மேலும் 200 மசூதிகள் திறப்பு.!

Pic: Gulf-Times

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மேலும் 200 மசூதிகள் திறக்கப்படும் என Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் உங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள தொழுகை நடைபெறும் இடங்களை கண்டுபிடிக்க புதிய இணைய சேவை.!

COVID-19 பரவலை தடுக்க, நடைமுறையில் உள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி மசூதிகளில் தொழுகை நடைபெறும் என மசூதிகள் மேலாண்மைத் துறை இயக்குநர் முஹம்மது பின் ஹமாத் அல் குவாரி அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், பாதுகாப்பான தொழுகையை உறுதிப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில், திணைக்களத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இமாம்கள் மற்றும் வழிபாட்டாளர்களுக்கு அல் குவாரி நன்றி தெரிவித்துள்ளார்.

கத்தாரில் வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி முதல் கூடுதலாக திறக்கப்படும் 200 மசூதிகளின்‌ பட்டியலை பெற கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க: லெபனான் வெடி விபத்து; கத்தார் அவசர மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்தது.! 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar