கத்தாரில் COVID-19 கட்டுப்பாடுகளை தளர்த்தும் 4ம் கட்டம் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.!

Phase four of lifting Covid-19 curbs split into two
Photo: Shutterstock

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தின் நான்காம் கட்டத்தை இரண்டு கட்டங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக்குழு அறிவித்துள்ளது.

கத்தார் நான்காம் கட்டத்திற்கு முன்னேறும்போது, ​​முயற்சிகள் வெற்றிகரமாக இருப்பதற்கும், நாடு முழுமையாக மீண்டும் திறக்கப்படுவதற்கும் மக்கள் தொடர்ந்து நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெய்ரூட் வெடிவிபத்தில் ஏற்பட்ட சேதங்களை கத்தார் துணை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.!

பொது சுகாதார மற்றும் சமூகத்தில் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று வீதத்தின் அடிப்படையில், நான்காம் கட்டத்தை இரண்டு கட்டங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நான்காம் கட்டத்தின், முதல் கட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கும், செப்டம்பர் நடுப்பகுதியில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில், சில கட்டுப்பாடுகளை மீண்டும் திணித்தல் அல்லது நீக்குதல் உள்ளிட்ட நிலைமை தற்போதைய அடிப்படையில் மதிப்பிடப்படும் என்றும், இரண்டாவது கட்டம் செப்டம்பர் மூன்றாம் வார தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கத்தாரில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில் பங்களித்த குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக்குழு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram