கத்தாரில் நான்காம் கட்டமாக என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்வு.? – முழு விபரம்.!

Phase 4 to start on 1 September; split into 2 phases
Pic: Qatar Airways

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தின் நான்காம் கட்டத்தை இரண்டு கட்டங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த நான்காம் கட்டத்தின் முதல் கட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கும், செப்டம்பர் நடுப்பகுதியில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில், சில கட்டுப்பாடுகளை மீண்டும் திணித்தல் அல்லது நீக்குதல் உள்ளிட்ட நிலைமை தற்போதைய அடிப்படையில் மதிப்பிடப்படும் என்றும், இரண்டாவது கட்டம் செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் COVID-19 கட்டுப்பாடுகளை தளர்த்தும் 4ம் கட்டம் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.!

நான்காம் கட்டத்தின் முதல் கட்ட தளர்வில் பின்வருவன உள்ளடங்கும்:

  • நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, தினசரி மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்கப்படும். கழிப்பறைகள், ஒழு செய்யும் இடங்கள் மூடப்பட்டிருக்கும்.
  • 15% திறனுடன் சினிமாக்கள் மற்றும் திரையரங்குகள் திறக்கப்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதுடன், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் நுழைய அனுமதிக்கப்படும்.
  • அமைச்சர்கள் கவுன்சிலின் முடிவைத் பின்பற்றி, பொது மற்றும் தனியார் துறைகளில் அதிகபட்சமாக 80% ஊழியர்களுக்கு பணியிடங்களில் வேலை செய்ய அனுமதி அளிக்கப்படும்.
  • வீடுகளில் அதிகபட்சமாக 15 பேரும், பொது வெளியில் 30 பேரும் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்கப்படும். போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்படும் நடைமுறைகளின்படி 30% திறனுடன் மெட்ரோ மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படும்.
  •  தேசிய சுற்றுலா கவுன்சில் அறிவிக்கும் நடைமுறைகளின்படி, 30% திறனுடன் உள்ளூர் கண்காட்சிகள் அனுமதி வழங்கப்படும்.
  • வீடுகளில் அதிகபட்சம் 40 பேர் மற்றும் பொது வெளியில் 80 பேர் கொண்ட திருமணங்கள் அனுமதிக்கப்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதுடன், EHTERAZ அப்ளிகேஷனை செயல்படுத்துவது, ஒரு மேசைக்கு அதிகபட்சம் 5 பேர் மற்றும் மேசைகளுக்கு இடையில் இரண்டு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும்.
  • பிறரை வாழ்த்தும்போது கை குலுக்குதல் மற்றும் முத்தங்களைத் தவிர்த்தல் மற்றும் அனைத்து விருந்தினர்களின் தொலைபேசி தகவல்களை வைத்திருக்க வேண்டும்.
  • விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஓய்வு நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
  • படகுத் தொழிலாளர்கள் உட்பட 30% திறனுடன் தனிப்பட்ட படகுகள் மற்றும் படகு வாடகைகள் அனுமதிக்கப்படும்.
  • கத்தார் தனது பயணக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றும். குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை பொது சுகாதார அமைச்சகம் அவ்வப்போது புதுப்பிக்கும்.
  • 50% திறனுடன் பாடசாலைகள் தங்களது செயல்பாடுகளைத் தொடங்கும்.
  • கோடைக்கால முகாம்கள், பொது பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான இடைநிறுத்தம் தொடரும்.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அறிவிக்கப்படும் நடைமுறைகளின்படி, 20% உட்புறத்திலும், 30% வெளிப்புறத்திலும் விளையாட்டு நிகழ்வுகளில் பார்வையாளர்களை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும்.
  • தனியார் சுகாதார கிளினிக்குகளை முழு திறனுடன் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும்.
  • சாதாரண வேலை நேரங்களில் 50% திறனுடன் மால்களை திறப்பது தொடர்வதுடன், 30% திறனுடன் மால்களிலுள்ள உணவகங்கள் திறக்கப்படும். குழந்தைகளை மால்களில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
  • வீட்டு சேவைகளில், முடிதிருத்தும், அழகு, மசாஜ் மற்றும் உடல்தகுதி பயிற்சி போன்றவைகளுக்கான இடைநிறுத்தம் தொடரும்.
  • வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சினால் அமைக்கப்படும் நடைமுறைகளின்படி, உணவகங்களை 30% திறனுடன் தொடங்க அனுமதிக்கப்படும்.
  • சந்தைகள் (SOUKS) 75% திறனுடன் செயல்பட அனுமதிப்பதுடன் மொத்த சந்தைகளில் 50% திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அருங்காட்சியகங்கள் மற்றும் பொது நூலகங்கள் முழு கொள்ளளவில் இயல்பான வேலை நேரத்தில் செயல்பட அனுமதிக்கப்படும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும்.
  • சுகாதார கிளப்புகள் (Health club), ஜிம்கள் மற்றும் பொது நீச்சல் குளங்களின் பணிகளை அரை திறனில் (50%) தொடர்வது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வசதிகளில் 30% திறனுடன் மசாஜ் மற்றும் sauna சேவைகளை அனுமதிப்பதுடன் 30% திறனுடன் உட்புற நீச்சல் குளங்கள் திறக்கப்படும்.
  • 50% திறனுடன் தனியார் கல்வி மற்றும் பயிற்சி மையங்களின் பணிகள் தொடரும்.
  • 30% திறனுடன் பணியிடங்களில் துப்புரவு மற்றும் விருந்தோம்பல் சேவைகளை மீண்டும் தொடங்குவதுடன், வீடுகளில் இந்த சேவைகளை மீண்டும் தொடங்கவும் அனுமதி வழங்கப்படும்.

இதையும் படிங்க: பெய்ரூட் வெடிவிபத்தில் ஏற்பட்ட சேதங்களை கத்தார் துணை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.!

மேலும், வெளியில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுதல், பாதுகாப்பான இடைவெளியை பராமரித்தல் மற்றும் EHTERAZ அப்ளிகேஷனை செயல்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக்குழு வலியுறுத்தியுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram