கத்தாரில் நாளை பரவலான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வுத்துறை ட்வீட்.!

Chance of scattered rain on Saturday: QMD weekend weather report
Pic: The Peninsula Qatar

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) வார இறுதியில் அதன் முன்னறிவிப்பில், வானிலையானது சில இடங்களில் பனிமூட்டமாக இருக்கும் என்றும், பகல்நேரத்தில் மேகங்களுடன் வெப்பமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

கத்தாரில் நாளை (05-09-2020) சனிக்கிழமை பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து தூதர் விவாதம்.!

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 31 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என குறிப்பிட்டுள்ளது.

கத்தாரில் இன்று காற்று வடமேற்கு திசையிலிருந்து வடகிழக்கை நோக்கி 5 கி.மீ முதல் 15 கி.மீ  வேகத்தில் வீசக்கூடும் என்றும், சில இடங்களில் 17 கி.மீ வேகத்தை எடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை சனிக்கிழமையில் காற்று தென்கிழக்கு திசை முதல் வடகிழக்கு திசை வரை 5 கி‌.மீ முதல் 15 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், சில இடங்களில் 18 கி.மீ வேகத்தை எடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 8 பேர் கைது‌.!

கத்தார் வடக்கு பகுதியில் நேற்று (30-08-2020) இரவு லேசான மழை; வானிலை ஆய்வுத்துறை ட்வீட்.!#QatarTamilNews | #Qatar | #QMD | #Rain | #கத்தார்செய்திகள் Video Credits: Qatar Weather

Posted by Tamil Micset Qatar on Monday, August 31, 2020

கத்தாரில் வடக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லேசான மழை பொழிவை வானிலை ஆய்வுத்துறை ட்வீட் செய்தது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram

Telegram