கத்தாரில் நாளை இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு; QMD ட்வீட்.!

Thundershowers and strong Winds
Pic: Gulf-Times

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) வார இறுதியில் அதன் முன்னறிவிப்பில், சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும் என்றும், பகல் நேரங்களில் வெப்பமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

கத்தாரில் நாளை (28-08-2020) பிற்பகலில் சில இடங்களில் பலத்த காற்று மற்றும் மோசமான தெரிவுநிலை போன்றவற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு QMD எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் நான்காம் கட்டமாக என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்வு.? – முழு விபரம்.!

அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறை 31 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாளை காற்று வடமேற்கு திசையிலிருந்து வடகிழக்கை நோக்கி 5 கி.மீ முதல் 15 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழையுடன் 22 கி.மீ வேகத்தை எடக்கூடும் என்றும் கூறியுள்ளது.

மேலும், நாளை மறுநாள் சனிக்கிழமையில் காற்று கிழக்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி 5 கி‌.மீ முதல் 15 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், பகல் நேரங்களில் இது 18 கி.மீ வேகத்தை எடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதையும் படிங்க: கத்தாரில் சுமார் 10 மில்லியனைத் திருடிய இணைய மோசடி கும்பல் கைது..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram