2030 ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்த கத்தார் தேர்வு.!

Doha host 2030 Asiangames
Pic: Haitham Al-Shukairi/AFP

கத்தார் நாட்டின் விளையாட்டு தலைநகரமான தோஹா இன்று (16-12-2020) புதன்கிழமை சவுதி வேட்பாளர் நகரமான ரியாத்துக்கு எதிராக 2030 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) உடைய 45 உறுப்பினர்கள் மஸ்கட்டில் ரியாத்தை விட தோஹாவை தேர்வு செய்ய வாக்களித்தனர்.

கத்தாரில் சுமார் 37,000க்கும்‌ மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி.!

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்களிப்பு நடைமுறைக்கு பிறகு, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) தலைவர் ஷேக் அஹ்மத் பஹத் அல் அஹ்மத் அல் சபா இந்த முடிவை அறிவித்தார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு, 2030ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்த உள்ளது.

தோஹா 2030 ஏலக் குழுவை QOC தலைவர் H E Sheikh Joaan bin Hamad Al Thani மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களான Mutaz Barshim மற்றும் Nada Arakji உள்ளிட்டோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

கத்தாரில் இந்த மாத இறுதிக்குள் வரவிருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள்.!

மேலும், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி 2022ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தின் தலைநகரான Hangzhou பகுதியில் நடைபெறும் என்றும், 20வது ஆசிய விளையாட்டு போட்டி 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானின் Aichi-Nagoya பகுதியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…