தோஹா மெட்ரோ மீண்டும் செயல்பட தயாராகி வருகிறது..!

Doha Metro getting ready to be back on track
Pic: Qatar Living

கத்தாரில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தோஹா மெட்ரோ தனது சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு பகுதியாக அதன் வலையமைப்பு பாதை முழுவதும் 18,000 சமூக இடைவெளி செய்திகளை நிறுவியுள்ளது.

COVID-19 பரவலை தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தோஹா மெட்ரோ மற்றும் பொது பேருந்துகள் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதையும் படிங்க: கத்தாரில் இருந்து இலங்கைக்கு மேலும் ஒரு சிறப்பு விமானம் அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கான 4ம் கட்டத்தில் தோஹா மெட்ரோ செயல்பாடுகளைத் தொடங்கும் என்றும், அதற்கான தேதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளுக்காக தோஹா மெட்ரோவின் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் 300 கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் வெப்பநிலையை கண்காணிக்க வெப்பநிலை அளவிடும் ஸ்கேனர்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் தோஹா மெட்ரோ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் ஆயுதப்படைகள் முதல் முறையாக இராணுவ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram