தோஹா மெட்ரோ பயணிகளுக்கு இலவச WiFi வசதி அறிமுகம்.!

Doha Metro will provide Wi-Fi services to commuters from Sept 1
Image Credits: Doha Metro

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக, தோஹா மெட்ரோ சேவைகள் இன்று (01-09-2020) முதல் மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், தோஹா மெட்ரோ 30 நிமிடங்களுக்கு இலவச WiFi வசதியை வழங்கவுள்ளதாகவும், 30 நிமிடங்களுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கூடுதல் பயன்பாட்டிற்கான கட்டணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: கத்தார் பெட்ரோலியம் செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

இதுகுறித்து தோஹா மெட்ரோ ட்வீட்டில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தோஹா மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில்களில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு WiFi வசதியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த சேவை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் இலவசமாக இருக்கும். நீங்கள் விரும்பினால், கூடுதல் நிமிடங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தோஹா மெட்ரோ பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக பின்பற்றப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!#QatarTamilNews | #DohaMetro | #Qatar | #கத்தார்செய்திகள்Video Credits: Doha Metro

Posted by Tamil Micset Qatar on Monday, August 31, 2020

இதையும் படிங்க: கத்தாரில் இன்று முதல் மெட்ரோலிங்க் பேருந்து சேவைகள் தொடக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

  Facebook

 Twitter

 Instagram