கத்தாரிலிருந்து நாடு திரும்பும் குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

Quarantine hotel packages extended
Pic: File/The Peninsula

கத்தாரில் பயணக் கட்டுப்பாட்டை எளிதாக்கும் விதமாக, கத்தாரிலிருந்து நாடு திரும்பும் குடியிருப்பாளர்கள் வெளியேறுவதற்கான நடைமுறைகள் பதிவு செய்யப்பட்டவுடன் உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளம் மூலம் விதிவிலக்கான திரும்பும் அனுமதி (exceptional return permit) உடனடியாக அச்சிட முடியும் என தெரிவித்துள்ளது.

இந்த சேவையானது நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் விசா மையங்கள் இந்த மூன்று நாடுகளில் மீண்டும் திறப்பு.!

மேலும், இந்த சேவை முன்னதாகவே நாட்டிற்கு வெளியே வசிப்பவர்களுக்கு அல்லது குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.

அவர்கள் Qatar Portal மூலம் விதிவிலக்கான திரும்பும் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கத்தார் வரும் பயணிகளுக்கு மறு நுழைவு எளிதாகிறது; தானியங்கி மூலம் அனுமதி.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…