லெபனானுக்கு கத்தார் அனுப்பிய முதல் கள மருத்துவமனை திறப்பு.!

Qatari filed hospital
Pic: Twitter/QNA

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவசர மருத்துவ உதவியை அனுப்புமாறு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவிட்டார்.

கத்தார் லெபனான் நாட்டிற்கு உதவ இரண்டு கள மருத்துவமனைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையின் கத்தார் தேடல் மற்றும் மீட்புக் குழு‌வையும் (Lekhwiya) தேவையான உபகரணங்களுடன்‌ கடந்த புதன்கிழமை (05-08-2020) அன்று அனுப்பி வைத்தது.

இதையும் படிங்க: பெய்ரூட் வெடி விபத்து; கத்தார் ஏர்வேஸ் 45 டன் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.!

மேலும், கத்தார் லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு மருத்துவ உதவிகள், நன்கொடைகள், அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றையும் வழங்கியுள்ளது.

இந்நிலையில், பெய்ரூட்டில் உள்ள அல்-ரூம் (Al-Roum) மருத்துவமனையில் கத்தார் அனுப்பிய முதல் கள மருத்துவமனையை லெபனான் கத்தார் தூதர் HE முகமது ஹசன் ஜாபர் அல் ஜாபர், டாக்டர் முஹம்மது ஹைதர், ஜெனரல் Elias Shamia மற்றும் Edgar Jojo ஆகியோரின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

Pic: QNA
Pic: QNA

மேலும், கத்தார் தேடல் மற்றும் மீட்பு குழு, Qatar Red Crescent லெபனானில் மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க: கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு மேலும் 36 விமானங்கள்; தூதரகம் அட்டவணை வெளியீடு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms

? Telegram https://t.me/tamilmicsetqatar