பெய்ரூட் வெடி விபத்து; கத்தார் ஏர்வேஸ் 45 டன் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.!

Pic: Twitter/Qatar Airways

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கத்தார் பல்வேறு மருத்துவ உதவிகளை லெபனான் நாட்டிற்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில், கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 45 டன் அத்தியாவசிய பொருட்களை தோஹாவில் இருந்நு லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு அனுப்பி வைத்தது.

இதையும் படிங்க: பெய்ரூட் வெடி விபத்து; களமிறங்கிய கத்தார் தேடல் மற்றும் மீட்பு குழு.!

கத்தார் ஏர்வேஸ் சரக்கு விமானம் மூலம் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு லெபனானுக்கு புறப்படுவதை கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி HE அக்பர் அல் பேக்கர் அவர்கள் பார்வையிட்டார்.

மேலும், கத்தார் ஏர்வேஸ் ட்வீட்டில், லெபனானில் கடந்த வாரம்‌ நடந்த சம்பவம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும், கத்தார் ஏர்வேஸ் லெபனான் மக்களுக்கு
ஆதரவாக ஒரு உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும், இது கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக அளிக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள FAHES வாகன சோதனை மையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar