கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு மேலும் 36 விமானங்கள்; தூதரகம் அட்டவணை வெளியீடு.!

VBM Tamilnadu Flights
Pic: FB/Indigo

வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 36 விமானங்களின் புதுப்பிப்பு அட்டவணையை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம்‌ வெளியிட்டுள்ளது.

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள புதுப்பிப்பு அட்டவணைப்படி, ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரிலிருந்து ஆகஸ்ட் 16 முதல் 30 வரை இந்தியாவிற்கு செல்லும் விமானங்கள் அறிவிப்பு.!

கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலும் மொத்தம் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதில், தமிழகத்திற்கு ஐந்து விமானம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து விமானங்கள் வரும் ஆகஸ்ட் 18, 21, 24, 26, 30 ஆகிய தேதிகளில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு செல்லும் இந்த விமானங்கள் இண்டிகோ விமானம் மூலம் இயக்கப்பட உள்ளது. இந்த விமானங்களுக்கான டிக்கெட்டிற்கு இந்தியா செல்ல வேண்டி தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானத்திற்கான டிக்கெட்டுகளை https://www.goindigo.in/ என்ற வலைத்தளம் வழியாக சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் கடந்த மாதத்தில் சுமார் 867 டன்‌ உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனை.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms

? Telegram https://t.me/tamilmicsetqatar