கத்தாரில் உள்ள இரத்ததான மையங்களில் அவசரத் தேவைகளுக்காக இரத்ததானம் செய்ய அழைப்பு..!

கத்தார் ஹமாத் மருத்துவ நிறுவனத்தின் (HMC) இரத்ததான மையங்களில் அவசரத் தேவைக்களுக்காக கத்தாரில் உள்ளவர்கள் இரத்தம் தானம் செய்யுமாறு HMC அழைப்பு விடுத்துள்ளது.

ஹமாத் மருத்துவக் நிறுவனத்தின் இரத்ததான மையத்திற்கு, A- மற்றும் A+ இரத்த வகைகள் அவசரத் தேவை என HMC வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் அல் ஷீஹானியாவில் கிருமிநாசினி தெளிக்கும் பணி..!

இரத்ததானம் செய்ய விரும்பும் ஆண்கள், ஹமாத் மருத்துவ நிறுவனத்தின் இரத்த தானம் மையத்தில் இன்று (13-09-2020) ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும், சனிக்கிழமை காலை 8 மணி மதியம் 2 மணி வரை இரத்தம் தானம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

அதேபோல்,  இரத்ததானம் செய்ய விரும்பும் பெண்கள் இன்று (13-09-2020) ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை Satellite இரத்ததான மையத்தில் இரத்ததானம் செய்யலாம் என HMC குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் இருவர் கைது‌.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…