கத்தாரில் எதிர்வரும் நாட்களில் வானிலை லேசான தூசி காற்றுடன் சூடாக இருக்கும்.!

Hot days with slight dust expected during weekend
Photo: The Peninsula Qatar

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD)  அதன் முன்னறிவிப்பில், எதிர்வரும் நாட்களில் வானிலையானது பகல் நேரத்தில் லேசான தூசி காற்றுடன் சூடாக இருக்கும் என்று கணித்துள்ளது.

கத்தாரில் இன்று (21-08-2020) குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வடக்கு கடலோரப் பகுதியில் வலுவான காற்று குறித்து வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் புகையிலை பொருட்களை கடத்த முயற்சி; சுங்க அதிகாரிகள் முறியடிப்பு.!

அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறை 33 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.

மேலும், இன்று வடமேற்கு திசையிலிருந்து  வடகிழக்கை நோக்கி காற்று 8 கி.மீ முதல் 18 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், சில இடங்களில் 22 கி.மீ வேகத்தை எடக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாளை சனிக்கிழமையில் காற்று வடமேற்கு திசை முதல் வடகிழக்கு திசை வரை 6 கி‌.மீ முதல் 16 கி.மீ வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடும் வெயிலில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்; MoPH ட்வீட்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar /

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/