கத்தாரில் எதிர்வரும் நாட்களில் வானிலை பலத்த காற்றுடன் மிகவும் சூடாக இருக்கும்.!

Pic: Abdul Basit/The Peninsula Qatar

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) அதன் முன்னறிவிப்பில், எதிர்வரும் நாட்களில் வானிலையானது பகல் நேரத்தில் சில மேகங்களுடன் மிகவும் சூடாக இருக்கும் என்றும், சில இடங்களில் தூசி காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறை 34 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.

கத்தாரில் இன்று (14-08-2020) கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் அல்-கானிம் பகுதியிலுள்ள கட்டிடத்தில் தீ விபத்து..!

மேலும், இன்று வடமேற்கு திசையில் 12 கி.மீ முதல் 22 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், கடலோர இடங்களில் 28 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், மாலை நேரத்தில் இது 5 கி.மீ முதல் 15 கி.மீ வரை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

கத்தாரில், நாளை சனிக்கிழமையில் காற்று வடமேற்கு திசை முதல் வடகிழக்கு திசை வரை 8 கி‌.மீ முதல் 18 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், சில இடங்களில் 22 கிலோ மீட்டரை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் 2022 FIFA உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு.!

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Instagram https://www.instagram.com/qatartms

? Telegram https://t.me/tamilmicsetqatar