கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருடன் இந்திய தூதர் சந்திப்பு..!

Indian Ambassador met Minister of Commerce and industry
Pic: Twitter/India In Qatar

கத்தாரில் புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தீபக் மிட்டல் (Dr Deepak Mittal) அவர்கள் கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் H.E. Mr. அலி பின் அஹமது அல்-குவாரி (Ali Bin Ahmed Al-Kuwari) அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், இந்தியா மற்றும் கத்தார் இடையேயான மக்கள் உறவுகள் மற்றும்  வரலாற்று வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறிய 6 நபர்கள் கைது‌.!

முன்னதாக, கத்தார் இந்திய தூதர், கத்தார் மத்திய வங்கியின் ஆளுநர்‌ H.E அப்துல்லா பின் சவுத் அல் தானி (Abdulla Bin Saoud Al-Thani) அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, இந்தியா, கத்தார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வழிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கத்தாரில் இதற்குமுன், 2016ஆம் ஆண்டு முதல் இந்திய தூதரக பணியாற்றி வந்த ஸ்ரீ பெரியசாமி குமாரன் தற்போது சிங்கப்பூர் இந்திய தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: கத்தாரில் இன்று முதல் மேலும் 150 மசூதிகள் திறப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook

Twitter

Instagram