கத்தாரில் நாளை முதல் மேலும் 150 மசூதிகள் திறப்பு.!

Ministry to reopen 150 additional mosques tomorrow
Pic : Alarabia

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாளை (28-08-2020) வெள்ளிக்கிழமை தொழுகையிலிருந்து மேலும் 150 மசூதிகளை மீண்டும் திறப்பதாக Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கத்தாரில் நாளை மீண்டும் திறக்கப்படும் 150 மசூதிகள் முன்பு திறக்கப்பட்ட மசூதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் நாளை இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு; QMD ட்வீட்.!

மசூதிகளில் பிரார்த்தனை செய்ய வருபவர்கள் அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுவது அனைத்து மசூதிகளையும் மீண்டும் திறக்க உதவும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாளை மீண்டும் திறக்கப்படும் 150 மசூதிகளின் பட்டியலை பெற கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க: கத்தாரில் நான்காம் கட்டமாக என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்வு.? – முழு விபரம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram