கத்தாரில், மறு அறிவிப்பு வரும் வரை மசாஜ் சேவைகள் இடைநிறுத்தம்; MOCI ட்விட்.!

Massage services remain suspended until further notice
Ministry of Commerce and Industry building

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மறு அறிவிப்பு வரும் வரை மசாஜ் சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MOCI) ட்விட்டர் பதிவு ஒன்றில் நினைவூட்டியுள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் ட்விட்டரில், 2020ஆம் ஆண்டின் முடிவு எண் (4)ன் படி, சலூன்களில் உள்ள மசாஜ் நடவடிக்கைகள், மசாஜ் பார்லர்கள்,  மொராக்கோ குளியல் சேவைகள் (Moroccan bath services) மற்றும் வீட்டு மசாஜ் சேவைகள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பெய்ரூட் வெடி விபத்து: கத்தார் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது..!

மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்ட முடிவுகள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு கட்டுப்படுமாறு அமைச்சகம் அனைத்து மக்களையும் அழைப்பு விடுத்துள்ளது.

கத்தாரில் COVID-19 கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கான மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, முடிதிருத்தும் கடைகளை வரையறுக்கப்பட்ட திறனுடன் செயல்படுவதற்கு அமைச்சகம் அனுமதி அளித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் கோடைக்கால வேலை நேரங்களை மீறியதற்காக 67 நிறுவனங்களின் வேலைத்தளங்கள் மூடல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/