கத்தார் Mesaieed மருத்துவமனை மீண்டும் வழக்கமான சேவைகளை தொடங்க உள்ளது.!

Pic: The Peninsula

கத்தாரில் உள்ள Mesaieed மருத்துவமனை ஹமாத் மருத்துவ நிறுவனத்தின் (HMC) COVID-19 மருத்துவமனை வலையமைப்பின் மையப் பகுதியாக இருந்து வருகிறது.

இந்த Mesaieed மருத்துவமனை கடந்த புதன்கிழமை அன்று கொரோனா வைரஸ் தொற்றுலிருந்து குணமடைந்த ஆறு பேர் கொண்ட கடைசி நோயாளிகளின் குழுவை பொது சுகாதார அமைச்சர் H E Dr Hanan Mohamed Al Kuwari முன்னிலையில் வழியனுப்பி வைத்தது.

தற்பொழுது, இந்த மருத்துவமனை உள்ளூர் சமூகத்திற்கான சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்கு தனது வழக்கமான சேவைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

கத்தார் தொழில்துறை பகுதியில் புதிதாக Satellite அவசர சிகிச்சைத் துறை திறப்பு.!

கத்தார் நாட்டில், தகவல்தொடர்பு நோய் மையத்துடன் (Communicable Disease Center)
நீண்ட காலமாக Hazm Mebaireek பொது மருத்துவமனை, Ras Laffan மருத்துவமனை,
Cuban மருத்துவமனை மற்றும் Mesaieed
மருத்துவமனை ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: The Peninsula Qatar