காய்கறிகள், பழங்கள், மீன்கள் மற்றும் அடிப்படை பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் நிர்ணயம்; கத்தார் MOCI ட்வீட்.!

Ministry clarifies about price variation of goods in different supermarkets
Pic: File photo/The Peninsula Qatar

கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MOCI) காய்கறிகள், பழங்கள், மீன்கள் மற்றும் சில அடிப்படை பொருட்களுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் ட்வீட்டில்,
காய்கறிகள், பழங்கள், மீன்கள் மற்றும் அடிப்படை பொருட்களுக்கான அதிகபட்ச விலையை நாங்கள் நிர்ணயம் செய்துள்ளோம். மற்ற பொருட்களைப் பொறுத்தவரை, ஒரு கடையின் விலையில் இருந்து மற்றொரு கடையின் விலை மாறுபட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் பல்வேறு இடங்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு களக்குழுக்கள்..!

மேலும், விற்பனை நிலையங்களில் பொருட்களின் விலை மற்றும் பொருட்களின் தரத்தை ஒப்பிட்டு பார்த்து வாங்குமாரும், காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்கள் போன்றவற்றிக்கான விலைகளை அமைச்சகத்தின் இனணயதளம் மூலம் காணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நுகர்வோர்கள் எந்தவொரு மீறல்கள் மற்றும் பரிந்துரைகளை 16001 என்ற அழைப்பு மையம் மூலம் தெரிவிக்குமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

காய்கறிகள், பழங்கள், மீன்கள் மற்றும் அடிப்படை பொருட்களுக்கான அதிகபட்ச விலைகளை காண இங்கு கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க: கத்தாரில் இன்று (ஆகஸ்ட் 23) புதிதாக 243 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram