கத்தாரில் பெண்கள் மற்றும் குடும்பங்களுக்காக சில கடற்கரைகள் அர்ப்பணிப்பு.!

Pic: Qatar Day

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) பெண்கள் மற்றும் குடும்பங்களுக்காக மட்டும் அர்ப்பணிக்கப்பட்ட 15 கடற்கரைகளின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

Simaisma கடற்கரையின் ஒரு பகுதி பெண்களுக்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல், Sealine கடற்கரை குடும்பங்கள் மற்றும் பொதுமக்களை தனித்தனி பகுதிகளில் பெறுவதாகவும் MME ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் அமீர், ஈராக் பிரதமருடன் தொலைபேசி உரையாடல்.!

Al Ghriya, Abu Zaluf, Al Zakhira, Farkiya, Simaisma, Al Wakra மற்றும் Sealine கடற்கரைகள் குடும்பங்களை மட்டும் அனுமதிக்கின்றன என்றும் மேலும், Al Ruwais, Fuwairet, Dukhan, Al Kharaij மற்றும் Al Udaid கடற்கரைகள் பொது மக்களை மட்டும் அனுமதிக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரைக்கு வருபவர்கள் கடலில் நீந்தும்போது கடல் அலைகள் உயர்வது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என MME எச்சரித்துள்ளது. Water scooters மற்றும் motorboats கடலோரத்திலிருந்து குறைந்தபட்சம் 400 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்.!

Source: The Peninsula Qatar

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar