மாடர்னா COVID-19 தடுப்பூசியின் முதல் தொகுதி விரைவில் கத்தார் வந்தடையும்.!

Moderna COVID-19 vaccine
Pic: Reuters

COVID-19 தடுப்பூசியின் இரண்டாம் தொகுதி சில வாரங்களுக்குள் கத்தார் நாட்டிற்கு வந்து சேரும் என மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா உருவாக்கிய COVID-19 தடுப்பூசியை கத்தார் பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளது என பொது சுகாதார அமைச்சகத்தின் (MoPH) தடுப்பூசி பிரிவு, சுகாதார பாதுகாப்பு மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவரான Dr. Soha Al Bayat அவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் கூறியுள்ளார்.

கத்தாரில் மேலும் 3 சுகாதார மையங்களிலும் COVID-19 தடுப்பூசி போடும் பணி.!

Pfizer-BioNTech மற்றும் மாடர்னா (Moderna) ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் கத்தார் கூட்டு சேர்ந்துள்ளது என்றும், தற்போது Pfizer-BioNTech தடுப்பூசி கத்தாரில் போடப்பட்டு வருகிறது என்றும், வரும் வாரங்களில் மார்டானா தடுப்பூசியின் முதல் தொகுதியை பெறுவோம் என நம்புவதாக Dr. Soha Al Bayat கூறியுள்ளார்.

மாடர்னா தடுப்பூசி கத்தார் வந்தால், இது நாட்டில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட COVID-19க்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியாகும்.

கத்தார் அவசரகால பயன்பாட்டிற்காக Pfizer-BioNTech தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது, இதனையடுத்து தடுப்பூசியின் முதல் தொகுதி கத்தார் வந்தைடந்த பின், முதல் கட்ட தடுப்பூசி பிரச்சாரத்தை டிசம்பர் 23, 2020 முதல் தொடங்கியது.

வளைகுடா நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம்: FIFA தலைவர் வரவேற்பு.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…