ஓமன் நாட்டில் அரசுப் பணிகளில் அதிக அளவில் பணியாற்றும் இந்திய பெண்கள்..!

Most expat women employed in Oman govt sector are Indians
Pic: Twitter/Atheer_Oman

ஓமன் நாட்டிலுள்ள புள்ளிவிபரங்கள் மற்றும் தகவலுக்கான தேசிய மையம், 2020ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபர ஆண்டுப் புத்தகத்தை வெளியிட்டது.

அதில், ஓமன் நாட்டில் அரசுப் பணிகளில் உள்ள வெளிநாட்டுப் பெண்களில் இந்தியப் பெண்கள் தான் அதிக அளவில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் அரசுப் பணிகளில் இந்திய பெண்கள் சுமார் 4,604 பேர் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 3,090 எகிப்திய பெண்கள் பணியாற்றுகின்றனர்.

இதையும் படிங்க: VBM 6ம் கட்டம்: ஓமானில் இருந்து இந்தியா செல்லும் கூடுதல் விமானங்கள் அறிவிப்பு.!

கடந்த 2019ஆம் ஆண்டின்படி, ஓமனில் அரசுப் பணியில் உள்ள இந்திய தொழிலாளர்களில் 37 சதவீதம் பேர் பெண்கள். இந்த பட்டியலில் இந்தியா, எகிப்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் சூடான் நாட்டு பெண்கள் உள்ளனர்.

மேலும், தனியார் துறையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். அதாவது 41,376 பெண்கள் பணியாற்றி வருவதாகவும், தனியார் துறைகளில் இந்தியப் பெண்கள் 27,683 பேர் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…