சூடான் வெள்ள பெருக்கு: கத்தார் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது..!

Qatari aid for Sudan flood victims
Pic: QFFD

சூடானில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சூடானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் விளைவுகளைத் தணிக்க, சூடானுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்புமாறு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் முன்னதாக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கத்தார் இந்திய தூதரகத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு..!

இந்நிலையில், கத்தார் அபிவிருத்திக்கான நிதியத்தின் (QFFD) ஆதரவுடன், கத்தார் அறக்கட்டளை களக்குழுக்கள் சூடானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது.

Pic: Qatar Charity

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, உணவு பொட்டலங்கள், தனிப்பட்ட சுகாதார பொருட்கள், மெத்தை, போர்வைகள் மற்றும் பிற நிவாரண பொருட்கள் போன்றவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு கத்தார் அறக்கட்டளையின் களக்குழுக்கள் விநியோகம் செய்கின்றன.

இதையும் படிங்க: கத்தார் ருவாஸ் துறைமுகத்தில் தடைசெய்யப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

COVID-19; கத்தாரில் புதிதாக 879 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.! 

Editor

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறிய மேலும் 10 பேர் கைது‌.!

Editor

பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்.!

Editor